மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா ஆனார் நந்தினி மைனா..! குழந்தையும் பிறந்தாச்சு.! என்ன குழந்தை தெரியுமா..? ரசிகர்கள் வாழ்த்து.!
சீரியல் நடிகை நந்தினி மைனா அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி மைனா. சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அன்றிலிருந்து மைனா என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.
சீரியலில் மிகப் பிரபலமாக இருந்த இவர் ஏற்கனவே ஜிம் மாஸ்டர் ஒருவருடன் திருமணம் முடிந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல சீரியல் நடிகர் யோகேஸ்வரன் என்பவரை நந்தினி மைனா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை நந்தினி மைனா சமூகவலைத்தளங்கள் மூலம் தெரியப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் அவரது வளைகாப்பு புகைப்படங்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இந்நிலையில் தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக நந்தினியின் கணவர் யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நந்தினி மைனாவுக்கு குழந்தை பிறந்த தகவல் சமூகவலைதளங்கள் மூலம் வைரலானதை அடுத்து சினிமா பிரபலங்கள் உட்பட அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.