ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விஜய் டிவி பிரபலம் மைனா! புகைப்படம்!



Nandhini maina latest photo goes viral

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் தொலைக்காட்சி.  இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு தொடர்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  அது போன்ற தொடர்களில் ஒன்றுதான் சரவணன் மீனாட்சி.  சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நந்தினி. 

சரவணன் மீனாட்சி தொடர் முடிவடைந்ததை அடுத்து தற்போது வேறு ஒரு சில தொடர்களில் நடித்து வருகிறார் நந்தினி.  இந்நிலையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நந்தினி இருவருக்குள்ளும் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அவரது கணவர் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார். 

vijay tv

தற்போது சன் தொலைக்காட்சியில் நாயகி சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவரை நந்தினி மைனா காதலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார் நந்தினி மைனா.  கலக்கப்போவது யாரு தொடரில் அவர் உடல், முகம் முழுவதும் கரியைப் பூசி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார்.

பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக தெரியும் நந்தினி மைனா அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.