மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
AR முருகதாஸ் - ரஜினி படம் பற்றி வெளியான வதந்தி! தெளிவு படுத்திய இயக்குனர் முருகதாஸ்!
ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என பல்வேறு வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் AR முருகதாஸ். இவர் இயக்கிய முதல் படம் தல அஜித் நடித்த தீனா திரைப்படம். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார் AR முருகதாஸ்.
அதனை தொடர்ந்து விஜயகாந்த், சூர்யா, விஜய் என தமிழ் சினிமாவை கலக்கியது மட்டும் இல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பலவாறு மொழி படங்களை இயக்கினார் AR முருகதாஸ். இவர் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் பல்வேறு சாதனைகள் படைத்தது.
“ Naarkkaali” is not the title of my next project , pls stop spreading rumors.
— A.R.Murugadoss (@ARMurugadoss) January 16, 2019
இந்நிலையில் கடைசியாக இவர் இயக்கிய சர்க்கார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தது. தற்போது ரஜினியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் AR முருகதாஸ். ஏற்கனவே இவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்றும், தற்போது வேறொரு கதையை எழுதி, அந்த கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
மேலும், அடுத்த படத்தின் தலைப்பு "நாற்காலி" என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பு "நாற்காலி" இல்லை, தயவு செய்து வதந்திகளை பரப்பவேண்டாம் என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் AR முருகதாஸ்.