மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவருக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது அந்த முன்னணி நடிகையா?? யார்னு தெரியுமா??
தமிழ் சினிமாவில் ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தியாகராஜன் குமாரராஜா. அதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சூப்பர் டீலக்ஸ். இதில் நடிகர் விஜய் சேதுபதி ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த கதாபாத்திரத்திற்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடிகர் ஃபகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ஆரம்பத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பையே பெற்றது.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரையும் அசர வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். ஆனால் இந்த கதாபாத்திரத்தில் முதலில் இவர் இல்லையாம். நடிகை நதியாதான் அதில் நடிக்கவிருந்தாராம். மேலும் ஒரு நாள் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவர் ஒரு சில காரணங்களால் அதிலிருந்து வெளியேறி விட்டாராம். பின்னரே ரம்யா கிருஷ்ணன் அந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.