மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹனிமூன் கொண்டாட்டத்தில் நயன்-விக்கி ஜோடி! அதுவும் எந்த நாட்டிற்குனு பார்த்தீங்களா??
தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ஏழு ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசனம் செய்யப் புறப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நன்றி கூறினர். அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன்- நயன்தாரா ஜோடி கேரளாவிற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் தற்போது தாய்லாந்திற்கு தேனிலவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தாய்லாந்து நாட்டின் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த நிலையிலேயே நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.