ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
Ak62வால் அஜித் மீது கோபப்பட்ட நடிகை நயன்தாரா... எடுத்த அதிரடி முடிவு.!
பிரபல நடிகை நயன்தாரா பல ஹிட் படங்களை கொடுத்து பல வருடங்களாகவே முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். இவர் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவத்தை கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நயன்தாராவை பற்றிய செய்தி, கிசு கிசு அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும்.
இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரின் இயக்கத்தில் பல படங்கள் நடித்து இருக்கிறார் நயன்தாரா. இறுதியாக விக்னேஷ் சிவன் இயக்கி விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இந்த படம் தோல்வியை தழுவியது.
இத்தகைய நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பின் போதே ஏகே 62 அப்டேட் வெளியானது. இப்படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு நயன்தாராவின் சிபாரிசின் மூலம் கிடைத்தது. இப்படத்தின் கதையை தயாரிக்க ஒரு வருட காலம் அவகாசம் நடிகர் அஜித் கொடுத்திருந்த நிலையில் துணிவு படத்திற்குப் பிறகு இப்படத்தின் கதையை கேட்ட அஜித்திற்கு கதை பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் ஏகே 62 வில் இருந்து விக்னேஷ் சிவனை நீக்கி விட்டனர்.
இதன் காரணமாக நடிகர் அஜித்திற்கும், ஏகே 62 தயாரிப்பாளர்களுக்கும் நயன்தாரா பலமுறை போன் செய்து பேசியும் எதுவும் நடக்கவில்லை என்று அதிருப்தியில் இருக்கிறார். இதற்கு மேல் அஜித்தின் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று முடிவை நயன்தாரா எடுத்துள்ளார் என்று கோலிவுட் திரையுலகம் கிசுகிசுத்து உள்ளது.