மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. தன் குழந்தைகளுக்காக நயன்தாரா இதையெல்லாம் விட்டுட்டாரா.! நெகிழ்ந்துபோன விக்னேஷ் சிவன்!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா என பிசியாக இருந்து வந்த இருவரும் திருமணமாகி நான்கு மாதத்திலேயே தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களானதாக அறிவித்தனர்.
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த இவர்கள் பின் பல சர்ச்சைகளில் சிக்கினர். ஆனால் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், எந்த சட்ட விதிமீறலிலுல் ஈடுபடவில்லை எனவும் சில ஆதாரங்களை ஒப்படைத்த நிலையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. நடிகை நயன்தாரா நேற்று தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த நிலையில் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாராவிற்கு வாழ்த்து கூறி இருந்தார். அவர் வெளியிட்ட பதிவில், கணவன் மனைவியாகவும் குழந்தைகளிடமும் நாம் கொண்டாடும் இந்த பிறந்தநாள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உன்னை ஒரு தாயாக பார்க்கும்போது மகிழ்ச்சியான முழுமையான தோற்றம் என உணர்கிறேன். நீ முழுமையடைந்துவிட்டாய். குழந்தைகள் உன்னை முத்தமிடுவதால் இப்போதெல்லாம் நீ மேக்கப் போடுவதில்லை. இத்தனை வருடங்களில் நான் இவ்வளவு அழகாக உன்னை பார்த்ததில்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.