மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விக்னேஷ் சிவனுடன் செம ஹேப்பியாக ஓணம் பண்டிகை கொண்டாடிய நடிகை நயன்தாரா! வைரலாகும் கியூட் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. ஹீரோக்களுக்கு இணையாக இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது, நயன்தாராவிற்கும், அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இருவரும் ஒன்றாக வெளியே செல்வது, புகைப்படங்களை வெளியிடுவது என பிஸியாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் ஒன்றாக இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். மேலும் இதற்காக இருவரும் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரளாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலனுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவர்களுக்கு ஓணம் பண்டிகை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.