மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணத்திற்கு பின்பும் ஓய்வில்லை - புதிய உச்சத்தை நோக்கி நடைபோடும் நயன்தாரா!
தென்னிந்திய திரைப்பட உலகில் நம்பர் ஒன் கதாநாயகியாக பல வருடங்களாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததோடு மட்டுமல்லாமல் தன்னை மட்டுமே மையப்படுத்திய பல படங்களிலும் நடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் மற்றும் கவிஞரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்ட நயன்தாரா மீண்டும் படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டத் துவங்கியுள்ளார். சமீபத்திய தென்னிந்திய நடிகைகள் தொடமுடியாத புதிய சாதனையை நோக்கி நடை போடுகிறார் நயன்தாரா.
சமீபத்தில் நயன்தாரா தனது 75வது படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு நடிகையாக இந்த காலகட்டத்தில் இத்தனை படங்களில் நடிப்பது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது.
சத்யராஜ் மற்றும் ஜெய் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தினை இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் இந்தப் படத்திற்காக நயன்தாராவிற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.