அது மட்டும் நடந்துவிட்டால் இனி நயன்தாராதான் கெத்து! என்ன விஷயம் தெரியுமா?



Nayanthara gonna act as a super women character soon

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சரத்குமார் நடிப்பில் உருவான ஐயா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயாகியாக அறிமுகமான நயன்தாரா விஜய், அஜித், ரஜினி என அணைத்து தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

மேலும் தனி ஒரு நடிகையாக இவர் நடிக்கும் படங்களும் மாபெரும் வெற்றிபெறுகிறது. தற்போது ஐரா படத்தில் நாயகியாக நடித்துவருகிறார் நயன்தாரா. மேலும், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 63 படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் நயன்தாரா.

nayanthara

இந்நிலையில் நயன்தாரா குறித்து ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நயன்தாராவிற்காக KJR ஸ்டுடியோஸ் வொண்டர் வுமன், கேப்டன் மார்வல் போன்ற ஒரு படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார்களாம்.

அப்படி இது நடந்தால் இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ தாண்டி சூப்பர் ஹீரோயின் என்ற லிஸ்டில் நயன்தாரா இடம்பிடித்துவிடுவார்.