அய்யய்யோ... நயன்தாராவுக்கு என்ன ஆச்சு... லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...



Nayanthara latest photo goes viral

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. முதலில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் 9 ஆம் தேதி கரம் பிடித்தார். இவர்களது திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் பிரபலங்கள் சூழ மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது. நயன்தாரா திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா கனெக்ட் என்ற படத்தில் தற்போது நடித்து இருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. கனெக்ட் பட ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட நயன்தாரா புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு என்ன ஆச்சு அழகாக இருந்த இவரது முகம் ஏன் இப்படி மாறி போச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

nayanthara