மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்லை! நடிகை நஸ்ரியா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து அவர் ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மேலும் பெருமளவில் பிரபலமானார். மேலும் அப்படத்தில் அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து நையாண்டி, திருமணம் எனும் நிக்கா போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம். இவர் தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
நடிகை நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதனை வைத்து ரசிகர்கள் நீங்கள் இனிமேல் நடிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் நான் நடிப்பதை நிறுத்தி விடவில்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கு கிடையாது. நல்ல கதாபாத்திரங்கள் வரும் போது கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது கூட அவர் கணவருடன் இணைந்து டிரான்ஸ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.