மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்குமே தெரியாது.! ஹிட் பாடலை பாடிய பாடகிக்கு ஷாக் கொடுத்த நீயா நானா கோபிநாத்.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் நிகழ்ச்சிகள் ஏராளம். அவ்வாறு மக்களை கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இதில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்பில் கலந்துரையாடல் நடைபெறும்.
அதனை சிரிக்க வைக்கும் வகையிலும், சிந்திக்க வைக்கும் வகையிலும் தொகுப்பாளர் கோபிநாத் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி சினிமா பட பாடகர்கள் மற்றும் இசை ரசிகர்கள் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல ஹிட் பாடல்களை கொடுத்த, பலருக்கும் அறிமுகமில்லாத பாடகிகள் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.
அவ்வாறு ஏலேலோ... ஏ... ஏலேலோ... பாடலை பாடிய பிரியா பிரகாஷ் என்பவரும் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தப் பாடலை பாடியது நான்தான் என எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியாது என்று கூறிய நிலையில், கோபிநாத் எனக்குமே தெரியாது என்று கூறி அவருக்கு ஷாக் கொடுத்துள்ளார். இந்த ப்ரமோ வீடியோ வைரலாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.