மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நொடிபொழுதில் வேற லெவலில் மாத்திட்டாங்களே.! இளைஞரை சுற்றிவளைத்து இளம்பெண்கள் செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவர்ந்து பொழுது போக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் நீயா நானா. இதில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தலைப்புகளில் விவாதிக்கப்படும்.
இதனை பல ஆண்டுகளாக கோபிநாத் நடுநிலை தன்மையுடனும், கலகலப்பாகவும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் காதலில் நான் ஒரு ராசியில்லா ராஜா என்ற தலைப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையே விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில் கலகலப்பாக சென்று கொண்டிருந்த அந்த நிகழ்ச்சியில் திடீரென பெண்கள் இளைஞர் ஒருவரை மேடைக்கு அழைத்து அவரது ஸ்டைலை மாற்றினால் ஹேண்ட்சம்மாக இருப்பார் என கூறி ஒரு நிமிடத்திலேயே ஸ்டைலாக புதிய டிரெண்டுக்கு மாற்றியுள்ளனர். அதனைக் கண்டு மற்ற ஆண்கள் வயிறெரிந்துள்ளனர். இந்தப் ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், அந்த நிகழ்ச்சியில் என்னென்ன சுவாரசியங்கள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.