மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. நீயா நானா சூப்பர் அப்பாவிற்கு இப்படியொரு பிரச்சினை இருக்கா?? கண்கலங்கிய மனைவி!! வருந்திய ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் அதிகம் படித்து சம்பாதிக்கும் மனைவிகள். அதனால் குடும்பத்தில் நிகழும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில்
நிகழ்ச்சியில் படித்த பெண் ஒருவர், படிக்காத தனது கணவர் குழந்தையின் பிராக்ரஸ் ரிப்போர்ட் கார்டை எழுத்துக்கூட்டி படிப்பதாக நக்கலாக கூறியுள்ளார். அதற்கு அந்த கணவர் அப்பாவித்தனமாக தனது மகள் எடுத்த மதிப்பெண்களை நீண்ட நேரம் பெருமிதத்தோடு பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கோபிநாத் அவரை சிறந்த தந்தையாக கௌரவித்து அவரது மகள் கையாலேயே பரிசு கொடுத்தார். அந்த வீடியோ பெருமளவில் வைரலான நிலையில் அந்த சீனிராஜா மற்றும் பாரதி தம்பதியினர் பெருமளவில் பிரபலமானர். மேலும் பலரும் மனைவியை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்து பல ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகின்றனர்.
சீனிராஜா சிறுவயதிலேயே படிப்பு வரவில்லை என்பதற்காக மளிகை கடை ஒன்றிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வேலை அதிகமாக இருந்ததால் சரியான நேரத்தில் சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்காமல், சிறுநீர் கழிக்காமல் இருந்ததால் அவரது சிறுநீரகம் சுருங்கிப் போய்விட்டதாம். இந்த நிலையில் டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்ற நிலைக்கு சென்ற சீனிராஜா வாரத்திற்கு இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகிறாராம். இதற்காக மாதம் 20-25 ஆயிரம் செலவாகிறதாம்.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால்தான் மனைவி பாரதி வேலைக்கு செய்து மருத்துவ செலவுகளை பார்த்துக் கொண்டு தனக்கு உதவியாக இருக்கிறார். அவர் தங்கம் என்று சீனிராஜா கூறியுள்ளார். மேலும் பேசிய பாரதி, நான் எப்பொழுதும் வீட்டில் அவரை கிண்டல் செய்துதான் பேசுவேன். அப்படித்தான் அங்கேயும் பேசினேன். அது அனைவராலும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சி மூலம் எனது கணவர் மீது மரியாதை அதிகரித்துவிட்டது என்று கூறியுள்ளார்.