மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நீயா நானாவில் ஒரு பெண் பேசியதை கேட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த கோபிநாத்! வைரலாகும் வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல நாட்களாக நடைப்பெற்று வரும் பிரபலமான ஷோ என்றால் அது நீயா நானா என்ற நிகழ்ச்சி மட்டுமே. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் இருந்து வருகிறார்.
மேலும் பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்ச்சி இருந்து வருகிறது. அதாவது வாரத்தில் ஒரு நாள்(ஞாயிற்றுக்கிழமை) கிட்டத்தட்ட 120 நிமிடங்கள் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியில் பலவிதமான தலைப்பில் மக்கள் இரு அணிகளாக பிரிந்து விவாதமாக நடைப்பெறும்.
அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் இந்த வாரம் சதாரண மக்கள் VS கின்னஸ் சாதனையாளர்கள் என்ற தலைப்பில் இரு அணிகளாக பிரிந்து விவாதம் தொடரப்பட்டது.
அப்போது ஒவ்வொருவராக வந்து தங்களது சாதனைகளை கூறினார்கள். அப்போது ஒரு பெண் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையை அப்படியே தலைக்கீழாக பேசக்கூடியவர். அவரிடம் கோபிநாத் ஒரு வார்த்தையை கூறுவார்.
உடனே அந்த பெண் அந்த வார்த்தையை தலைக்கீழாக பேசியுள்ளார். அதனை பார்த்ததும் கோபிநாத் தலைக்கால் புரியாமல் துள்ளி குதித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.