"சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது பிக் பாஸ்" நெட்டிசன்கள் ஆதங்கம்.!



netizens-trolled-bigboss

ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என்று பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் ஒரு பிக் பாஸ். இது மேற்கத்திய நாடுகளில் ஒளிபரப்பான பிக் பிரதர் நிகழ்ச்சியின் தாக்கத்தில் இந்தியாவில் தற்போது உருவாக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

kamal

தமிழில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி உள்ளார். நவநாகரீக மேல்தட்டு மக்களே பெருவாரியாக பங்கேற்கும் நிகழ்வில், அவர்கள் சாதாரண பின்புலத்தில் இருந்து வரும் போட்டியாளர்களை தரக்குறைவாக நடத்துகின்றனர்.

தற்போதைய சீசனின் போட்டியாளர்கள் பலரும் மிக சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். உருவகேலி செய்வது, தங்கள் வன்மத்தை தீர்த்துக்கொள்ள தக்க சமயம் பார்த்து பாதுகாப்பு பிரச்சனைகளை எழுப்புவது என்று மிகவும் தரக்குறைவாக நடந்து கொள்கின்றனர்.

kamal

இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசன் ஏற்கனவே ஒரு போட்டியாளர் மீதான குற்றச்சாட்டை தீர விசாரிக்காமல் அவரை வெளியேற்றியதால், பெரும்பாலான மக்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிகழ்ச்சி ஒரு மோசமான தாக்கத்தை தான் ஏற்படுத்துகிறது.