மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக முதல்வர்களின் பட்டியலில் விஜயின் புகைப்படம்! சர்ச்சையை கிளப்பிய சர்க்கார் போஸ்டர்!
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் நாளை வெளியாகிறது சர்க்கார் திரைப்படம். படம் முழுவதும் அரசியல் சாயம் பூசப்பட்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏற்கனவே சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் கதை திருட்டு கதை என ஒரு புறம் வில்லங்கம் தொரத்தியது. பின்னர் ஒருவழியாக திருட்டு கதை விவகாரம் சுமூகமாக பேசிமுடிக்கப்பட்டது.
எல்ல எதிர்ப்புகளையும் தாண்டி நாளை வெளியாக்குகியது சர்க்கார். இந்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சர்க்கார் படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று குறிக்கும் வகையில் சென்னை நகரின் முக்கிய இடங்களில் போஸ்டர்களை தெரிக்கவிட்டுள்ளனர் விஜய் ரசிகர்கள். இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களின் படங்கள் வரிசையாக உள்ளது. அதில், ஒரு விரல் புரட்சியுடன் விஜய் படமும் இடம்பிடித்துள்ளது.