மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைஞர்களை கவர்ந்த இளம் செய்தி வாசிப்பாளர் வெப்சீரியஸில்! வெளியான புகைப்படத்தால் இளைஞர்கள் குஷி!
பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்தின் அழகு மற்றும் தமிழ் உச்சரிப்புக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இளைஞர்களிடையே அவர் மிகப்பிரபலமாக மாறினார். இவரது அழகை காணவே செய்திகளை பார்க்கும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடியது.
இதனையடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருந்த சர்கார் படத்தின் மூலம் பிரபலமானார் செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத். பின் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் நடித்திருந்தார்.
தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதாசம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார்.
இந்த படம்மூலம் பிரபலமானவர், செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத். இவர் தனது காதலரான பிரபாகரனை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் தன் பணிக்கு திரும்பியுள்ள அனிதா, தற்பொழுது ஒரு வெப் சீரியசில் நடித்து வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.