பாண்டியன் ஸ்டோர் தொடரில் புதிய மாற்றம்! திடீரென விலகிவிட்டாரா இந்த முக்கிய பிரபலம்? தீயாய் பரவும் ஷாக் தகவல்!



news spread director changed in pandian store serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். அண்ணன் ,தம்பி பாசத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் குடும்ப தொடரான இதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், வெங்கட், ஹேமா பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.  

இந்த தொடரில் ரசிகர்களால் பெருமளவில் ரசிக்கப்பட்ட ஜோடி கதிர்- முல்லை ஜோடிதான். இதில் கதிராக குமரன் நடித்துள்ளார். மேலும் முல்லையாக விஜே சித்ரா நடித்து வந்த நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டார்.  இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தில் பாரதிகண்ணம்மா தொடரில் அறிவுமணியாக நடித்து வந்த காவியா நடிக்கிறார். 

pandian store

விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலிருந்து இயக்குனர் சமீபத்தில் விலகியதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் , பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி தொடரின் மஹாசங்கமத்திற்கு முன்பே அவர் விலகியதாகவும், அதன் பிறகு  பாக்கியலட்சுமி தொடரின் இயக்குனரே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரையும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.