மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட இவங்களுமா?.. நயன் - விக்கியை தொடர்ந்து ரசிகர்களை கடுப்பேற்ற களமிறங்கிய மற்றொரு ஜோடி..! வெளிவந்த ஹனிமூன் ரோமெண்டிக் போட்டோஸ்..!!
இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி பிரம்மாண்டமாக மகாபாரபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்திய நிலையில், வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று வந்தனர்.
பின் தங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்து சில நாட்களுக்கு முன்னதாக மீண்டும் இருவரும் ஹனிமூன் சென்றனர். அங்கிருந்து இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தினமும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றினர்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு போட்டியாக மற்றொரு நட்சத்திர ஜோடியும் தங்களது ஹனிமூன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர். நடிகை நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி இருவரும் தற்போது பாரிசுக்கு தங்களது நூறாவது திருமண நாளை கொண்டாட ஹனிமூன் சென்றுள்ளனர்.
அங்கு ஜோடியாக இருவரும் எடுத்துக் கொண்ட அழகிய ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடவே ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறினாலும், சிலர் வயிறு எரிந்து வருகின்றனர்.