மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னா இப்படி இறங்கிட்டாங்களே.. சிம்பு பட நடிகை செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்! வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 2021 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால். அதனை தொடர்ந்து அவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்தார். இதன் மூலம் அவர் பெருமளவில் பிரபலமானார்.
மேலும் அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. மேலும் அவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சென்னையில் கோயில் கட்டி, சிலை வைத்துள்ளனர். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.
இந்த நிலையில் அவர் தற்போது மதுவிற்கு விளம்பரம் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், மதுவை கோப்பையில் ஊற்றி முகர்வது போலவும், பிராந்தியை நன்றாக ருசித்து பருகலாம் எனவும் பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் அவர் இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.