மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அவர்தான் பயங்கரமானவர்.. நம்பாதீங்க.! பிக்பாஸிலிருந்து வெளியேறிய நிவாஷினி என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6 21 போட்டியாளர்களுடன் தொடங்கியது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 போட்டியாளர்களே உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் நிவாஷினி குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகாமல் இருந்த அவர் கானா பாடகர் அசல் கோளாறுடன் நெருங்கி பழகியதன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஷினி முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து லைவ் ஷோவில் பேசியுள்ளார். அவர், நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் போது எனக்கு பெரிய கஷ்டமாக தெரியவில்லை. ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தான் என்னை விட மோசமானவர்கள் பலர் பிக்பாஸ் வீட்டில் உள்ளார்கள். நான் எதற்காக வெளியே வந்தேன் என தோன்றியது. பிக்பாஸ் நிகழ்ச்சியை, குயின்ஸியை ரொம்பவே மிஸ் செய்கிறேன். இன்னும் அந்த வீட்டை விட்டு எனது நினைப்பு வெளியே வரவில்லை என கூறியுள்ளார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருப்பவர்களில் யார் பயங்கரமானவர் என்ற கேள்விக்கு விக்ரமன் எனவும், அசீம் பற்றி கேட்டதற்கு, ரொம்பவே நல்லவர். எதையும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவார் எனவும் கூறியுள்ளார். இதைகுறித்து நான் பிறகு கூறுகிறேன் என கூறியுள்ளார்.