மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இது முதல்முறையல்ல.. உணவு பார்சலை பிரித்த பிரபல நடிகைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வைரலாகும் ஷாக் புகைப்படம்!
நடிகை நிவேதா பெத்துராஜ் பிரபல உணவகம் ஒன்றின் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழகத்தை சேர்ந்த அவர் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் டிக் டிக் டிக், திமிர் பிடிச்சவன், சங்கத் தமிழன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபுதேவாவுடன் இணைந்து அவர் நடித்துள்ள பொன் மாணிக்கவேல் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்று பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், தான் ஸ்விக்கி ஆப் மூலம் பிரபல உணவகம் ஒன்றில் உணவு ஆர்டர் செய்ததாகவும், அந்த சாப்பாட்டை சாப்பிட திறந்தபோது அதில் கரப்பான்பூச்சி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி உணவில் கரப்பான்பூச்சி இருக்கும் புகைப்படத்தையும் அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் இது முதல்முறை இல்லை எனவும், அதற்கு முன் இரண்டு தடவை இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இத்தகைய உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.