மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. பாவம் விக்கி! திருமணத்திற்குப் பிறகு அது இல்லையாம்.! நயன்தாரா எடுத்த அதிர்ச்சி முடிவு!
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
மேலும் சுற்றுலா செல்வது, கோவில்களுக்குச் செல்வது என அடிக்கடி ஒன்றாக உலா வருகின்றனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இருவருக்கும் திருமணம் எப்போது என ரசிகர்கள் பெரிதளவில் எதிர்பார்த்த நிலையில் தற்போது அவர்களுக்கு ஜூன் 9ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா திருமணம் முடிந்தபிறகு ஹனிமூன் செல்லவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை நயன்தாரா அதிக எடைக் குறைப்பில் ஈடுபட்டதால் அவரது தோல் சுறுங்கி வயதான தோற்றத்தில் காணப்படுகிறாராம். அதற்காக அவர் கேரளாவில் சிகிச்சை மேற்கொள்ள உள்ளாராம். மேலும் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் ஏகே 62 படத்தை இயக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.