கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
திருச்செந்தூரில் பயங்கரம்... மனைவியிடம் அத்துமீறிய வட மாநில இளைஞர்.!! கல்லால் அடித்தே கொலை செய்த கணவன்.!!
திருச்செந்தூர் அருகே திருமணமான பெண்ணிடம் தவறான முறையில் நடக்க முயன்ற வட மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சுரேஷ் என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில இளைஞர் கொலை
திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில் இறந்த இளைஞர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ் பிகிரா என தெரிய வந்தது. மேலும் அவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.
விசாரணையில் சிக்கிய குற்றவாளி
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்த காவல்துறையினர் துறையினருக்கு சுரேஷ் என்ற நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நபரை கைது செய்த காவல்துறை தங்களது பாணியில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஒடிசாவை சேர்ந்த இளைஞரை கொலை செய்ததை சுரேஷ் ஒப்புக்கொண்டார்.
இதையும் படிங்க: அண்ணியின் மீது பாய்ந்த கொழுந்தன்... எமனாக மாறிய அண்ணன்.!! கொலையில் முடிந்த தகராறு.!!
ஒப்புதல் வாக்குமூலம்
இது தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த சுரேஷ் ஓடிஸா இளைஞர் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதால் அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். அந்த ஒடிசா இளைஞர் சுரேஷின் மனைவியான சுமுதாவிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் அந்த இளைஞரை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறை சிறையில் அடைத்தது.
இதையும் படிங்க: மண்வெட்டியால் அடித்து மாமியார் படுகொலை... மது போதையில் மருமகன் வெறி செயல்.!!