மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓவியா, ஆரவ் திருமணம் எப்போது? ஓவியா கூறிய தகவல்!
ஒருசில படங்களுக்கு பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை ஓவியா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் இவர் செய்த குறும்புகள், கலாட்டாக்கள், நடனம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
பின்னர் தன்னுடைய சாகப்போட்டியாளரான ஆராவை காதலித்து, அந்த காதல் தோல்வியடைந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா. இந்நிலையில் நடிகை ஓவியாவிற்காகா அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மி என வலைதள பக்கங்களை தயார்செய்து அதில் ஓவியா புகழ் பாடினர்.
அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே அவர்களின் ரசிகர்களின் விருப்பம். இந்நிலையில் ஓவியா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தற்போது சினிமாவில் பிசியாகுபவர்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றனன. சில படங்களை நான் தேர்வு செய்துள்ளேன்.
எனக்கும் ஆரவுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. எனக்கு அவர் மீது அக்கறை உள்ளது. அவருக்கும் என் மீது அப்படி தான். இந்த உறவுக்கு பெயர் நட்பு என்று நான் கூற மாட்டேன் என்றார்.
படங்களில் நடித்து முடித்தபின் ஆரவ், ஓவியா திருமணம் குறித்து அவரிடம் இருந்து ஒரு நல்ல பதிலை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.