மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் படத்திலேயே பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா? செம உற்சாகத்தில் ரசிகர்கள்!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி, ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். இத்தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் பல தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்களில் நடித்தது மட்டுமின்றி பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்தார்.
இந்நிலையில் தனது கலகலப்பான பேச்சால் ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சித்ரா தற்போது முதன்முறையாக கால்ஸ் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் திரில்லர் கதையம்சம் கொண்டதாக உருவாகி வரும் இப்படத்தில் சித்ரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் இவருடன் தேவதர்ஷினி வினோதினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் கால்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி சினிமாத்திரையில் கொடிகட்டி பறக்கும் சிவகார்த்திகேயன் , சந்தானம், ரியோ போன்று இவரும் பிரபலமானார் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.