தற்கொலை செய்து கொண்ட பாண்டியன் ஸ்டோர் புகழ் சித்ரா இன்ஸ்டாகிராமில் கடைசியாக வெளியிட்ட பதிவு! சோகத்தில் ரசிகர்கள்!



pandian store chitra last instagram post viral

பல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான  சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் வரும் ஜனவரி மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில் சற்றும் எதிர்பாராதவிதமாக ஷூட்டிங்கிற்கு சென்ற இடத்தில் சித்ரா நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சித்ரா கடைசியாக நேற்று இரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் இவ்வளவு அழகாக, கலகலப்பாக இன்ஸ்டாகிராமில் பிசியாக இருந்த சித்ராவா தற்கொலை செய்துகொண்டார் என அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.