மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீரியலில் மட்டுமின்றி, நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் மீனா! தற்போது எப்படி இருக்கிறாய் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர் ஹேமா. சினிமாத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர் எம்சிஏ முடித்துவிட்டு, சைதாப்பேட்டை காவல்துறை அலுவலகத்தில் ஹார்டுவேர் என்ஜினியராக பணிபுரிந்தார்.
அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான அவர், அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் மூலம் நடிக்க துவங்கினார். பின்னர் குலதெய்வம், மெல்லதிறந்தது கதவு சின்னதம்பி உள்ளிட்ட பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் பாயும் புலி, அட்டகத்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து அவர் தற்போது பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், ஹேமா தற்போது உண்மையாகவே கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்ப்பமாக இருக்கும் ஹேமா தற்போது அழகான போட்டோசூட் நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.