மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவின் நிழல் சர்ச்சை.! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் பார்த்திபன்.! வைரலாகும் பதிவு!!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம்'இரவின் நிழல்'. இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை அகிரா புரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ளது. இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதில் பார்த்திபன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரிகிடா எனும் புது நாயகி அறிமுகமாகியுள்ளார். படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரிகிடா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சேரிக்கு போனால் கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். மக்களுக்கே தெரியும் அங்கு எப்படி பேசுவார்கள் என பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அவருக்கு எதிராக கண்டனங்களும் எழுந்தன. இந்த நிலையில் பிரிகிடா, அவ்வாறு சொன்னதற்கு நான் மனமார வருந்துகிறேன். படத்திற்காக இடம் மாறும்போது, மொழியும் மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்து ஒரு தவறான உதாரணத்தை கூறிவிட்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார்.
Brigida சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது.2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம்,கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால்.என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை hero ஆக்குவதே! https://t.co/NSq3LNaYt7
— Radhakrishnan Parthiban (@rparthiepan) July 17, 2022
அதை தொடர்ந்து நடிகர் பார்த்திபனும், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், மனக்காயம் அடைந்தவர்களிடம்.1989-ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போராட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே என குறிப்பிட்டுள்ளார்.