சிம்பு என்றாலே வம்பு தானா? பெரியார் குத்துக்கு வரும் கருத்துக்கள்!.



periyarkuthu comments


நடிகர் சிம்பு சினிமாக்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் அவருக்கு விருப்பம் அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆல்பங்களில் பாடி வெளியிடுவார். இந்த நிலையில் ரிபெல் ஆடியோ என்ற நிறுவனத்திற்காக சிம்பு ஒரு ஆல்பத்தில் பாடியுள்ளார்.

இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலை சிம்பு பாடி அதற்கு நடனமும் ஆடியுள்ளார். பெரியார் குத்து என்கிற அந்த பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. பாடல் வீடியோவை பார்த்தவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். 
 
"உண்மையான நாய் அது நன்றியோடு கெடக்கும், வேஷம் போட்டு வந்த நாய் மானம் கெட்டு குறைக்கும்" போன்ற தத்துவமான பாடல் வரிகள் சிம்புவின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது . 
 
பெரியார் குத்து பாடலை பார்த்துவிட்டு ம்பு என்றாலே வம்பு தானா என்று நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.