சன் டிவி நினைத்தால் இப்படி கூட செய்ய முடியுமா? ப்ளு சட்ட மாறனுக்கு சன் நிறுவனம் வைத்த பெரிய ஆப்பு!



Petta movie review removed from youtube

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடித்த திரைப்படம் பேட்ட. பொங்கலை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பேட்ட திரைப்படம். விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் என பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், சமூக வலைத்தளங்களில் பேட்ட படம் பற்றி தவறாக சித்தரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரபல YouTube சேனல் ஓன்று பேட்ட படத்தை பற்றியும், அதன் இயக்குனர் பற்றியும் தவறாக சித்தரித்ததாக அந்த வீடீயோவை YouTube பை விட்டு சன் டிவி நிறுவனம் தூக்கியுள்ளதகா செய்திகள் வெளிவந்தன.

petta

தமிழ் டாக்கீஸ் என பெயர் வைத்திருந்தாலும் புளு சட்ட மாறன் என்றால்தான் அனைவருக்கும் தெரியும். ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என எந்த பெரிய ஹீரோவாக இருந்தாலும் சரி, படத்தை தாறுமாறாக விமர்சிப்பவர் மாறன். இதனால், திரைத்துறையிர் மற்றும் ரசிகர்களின் கோபத்திற்கு இவர் ஆளாவதுண்டு.

தற்போது பேட்ட படம் பற்றி கருத்து கூறியதால் பேட்ட படம் பற்றிய விமர்சன வீடியோ YouTube இல் இருந்து  நீக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. ஆனால், தற்போது யுடியூப் நிறுவனத்திடம் போராடி அந்த வீடியோவை மீண்டும் மீட்டுள்ளார் மாறன்.