"என்னையா இப்படி எறங்கிட்டிங்க.." இயற்கை உபாதை கழித்தத்தில் முன் விரோதம்.!! பெண் படுகொலை.!!
சென்னை திருவொற்றியூரில் பிளாட்ஃபாரத்தில் பழ வியாபாரம் செய்து வந்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொலையாளி அளித்துள்ள வாக்கு மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கணவன் - மனைவிக்கு கத்திக்குத்து
சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் கௌரி. இவர் அப்பகுதியில் உள்ள தேரடி சன்னதி தெருவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கணவருடன் சேர்ந்து பழ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது மது போதையில் வந்த நபர் கெளரியை கத்தியால் குத்தினார். இதனை தடுக்க முயன்ற அவரது கணவருக்கும் கத்தி குத்து விழுந்தது.
பரிதாபமாக பலியான கௌரி
இந்தக் கொடூர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது தொடர்பாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்த கௌரி மற்றும் அவரது கணவர் மாரிமுத்து ஆகியோரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கௌரி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து காவல்துறை மேற்கொண்ட விசாரணையில் திருவொற்றியூர் பகுதியில் பிளாட்பார்மில் தங்கி கூலி வேலை செய்து வரும் சேகர் என்ற நபர் கௌரியை கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: 3 நாளில் திருமணம்... உயிரை மாய்த்து கொண்ட இளம் பெண்.!! மர்மம் என்ன.??
பரபரப்பு வாக்குமூலம்
கௌரி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலமளித்த சேகர் தனக்கும் அவருக்கும் இடையேயான முன் பகை காரணமாக அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார். சேகர் படுக்கும் இடத்தில் கௌரி இயற்கை உபாதை கழித்திருக்கிறார். இது தொடர்பாக கௌரியிடம் கேட்டபோது இருவருக்கும் பிரச்சனை ஆரம்பமாகி இருக்கிறது. மேலும் கௌரி தன்னுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் சேகர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் கோவிலுக்கு வருபவர்களிடம் 10 ரூபாய் கேட்டபோது கௌரி தன்னை கண்டித்து ஏளனம் செய்ததால் ஆத்திரமடைந்து மது போதையில் வந்து அவரை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!