மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷுடன் கை கோர்த்த பொன்னியின் செல்வன் திரைப்பட ஒளிப்பதிவாளர்.!
நடிகர் தனுஷ் முதலில் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமே நடித்து வந்தார். இன்னும் சொல்லப்போனால், கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அவர் பல துன்பங்களை சந்தித்தார் என்றும் சொல்லலாம். எப்படியோ அவர் நினைத்ததை போலவே தமிழ் சினிமாவுலகத்தில் தன்னை ஒரு கதாநாயகனாக நிலை நிறுத்திக் கொண்டதோடு, திரையுலகத்தின் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும் மாறினார்.
இந்த நிலையில், அதன் பிறகு பாடலாசிரியர், பின்னணி பாடகர் போன்ற அவதாரங்களையும் எடுத்தார் தனுஷ். அந்த வரிசையில் தற்போது இயக்குனர் என்ற அவதாரத்தையும் எடுத்திருக்கிறார். அவர் தற்போது தன்னுடைய அக்கா மகனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
அதோடு, இந்த திரைப்படத்தில் அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தலைநகர் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகக் குறைந்த நாட்களிலேயே இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க பட குழு திட்டமிட்டிருக்கிறது.
அதோடு இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக அண்மையில் வெளியான பைட் கிளப் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒப்பந்தமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.