மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படுஜோர்.. ரசிகர்களின் தாறுமாறான வரவேற்பு.! முன்பதிவிலேயே மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!!
இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று காவியமான இதில் , கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இதன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இரு தினங்களுக்கு முன் தமிழகத்தில் முன்பதிவு தொடங்கிய நிலையில் பல திரையரங்குகளில் பெரும்பாலான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளது.
அதனை போலவே வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. முன்பதிவு படு ஜோராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் பிரீமியர் காட்சி மூலமாக மட்டும் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதாவது படம் ரிலீசுக்கு முன்பே இந்திய மதிப்பில் 3 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.