அரபிக் குத்து நாயகியின் 'ஜிலு ஜிலு' போஸ்! பூஜா ஹெக்டேவின் செம ஹாட் வீடியோ!



pooja-hegde-super-hot-pose-went-viral-social-media

இந்திய சினிமாவிலும் மாடலிங் துறையிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் நடித்து வரும் முன்னணி கதாநாயகி. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் கிசிகா பாய் கிசிகா ஜான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Pooja hegde

தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் இவர். இந்தப் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்துப் பாடலில் இவர் ஆடிய நடனம் அனைவரையும் கிறங்க வைத்தது. நடிப்பு மட்டுமல்லாது மாடலிங்கிலும் தன்னுடைய முத்திரையை பதித்து வருபவர் இவர்.

சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களையும் போட்டோ ஷூட்டுகளையும் அவ்வப்போது பகிர்ந்து வருவார். தற்போது விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இருக்கிறார்.

Pooja hegdeகோல்டன் சாக்லேட் கலரில் மாடர்ன் உடையணிந்து  கேமராக்களுக்கு இவர் போஸ் கொடுக்கும் அந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. மேலும் இந்த நிகழ்ச்சியின் வீடியோவும் ட்விட்டரில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது.