மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆட்டம், பாட்டத்துடன் செம ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடிய பூமிகா.! அதுவும் எங்கு தெரியுமா?? வைரல் வீடியோ!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. தொடர்ந்து அவர் ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகாவின் நடிப்பு அனைவரின் மனதையும் கவர்ந்தது.
நடிகை பூமிகா ஹிந்தி, மலையாளம், பஞ்சாப் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது அண்ணி மற்றும் அக்கா என்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போதும் சில படங்களில் நடித்து வரும் பூமிகா அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பூமிகா ஊட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்து அவரே பரிமாறியுள்ளார். பின் அங்கு உள்ளவர்களோடு அவர் நடனமாடி அவர் மகிழ்ச்சியாக இருந்ததுடன் அனைவரையும் மகிழ்வித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.