மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தனது தோற்றத்தை மாற்ற சிகிச்சை எடுத்து வரும் லவ் டுடே பட நடிகர் பிரதீப் ரங்கநாதன்!"
2015ம் ஆண்டு "வாட்ஸப் காதல்" என்ற குறும்படத்தை இயக்கியதன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இதையடுத்து 2019ம் ஆண்டு ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான "கோமாளி" படத்தை இயக்கி வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இந்தப் படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதையடுத்து இவர் இரண்டாவது படமான "லவ் டுடே" படத்தை 2022ம் ஆண்டு இயக்கினார். சிறிய பட்ஜெட்டில் வெளியான இப்படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றது.
கிட்டத்தட்ட 100கோடி வரை இப்படம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லலித் குமார் தயாரிக்கும் இப்படம் 60கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படத்தில் நடிக்க பிரதீப்புக்கு 15கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்நிலையில் ஹீரோவாகி விட்டதால், பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.