மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல நடிகை! இதுதான் காரணமா? வெளியான உண்மை தகவல்.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடிக்க உள்ளார் தல அஜித். வலிமை படத்திற்காக உடல் எடையை குறைத்து, மேக்கப் போட்டு மீண்டும் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார் அஜித்.
மேலும், அதிரடி ஆக்சனாக உருவாக இருக்கும் இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். படத்தில் ஸ்ரீதேவி - போனிகபூரின் மூத்த மகள் ஜான்வி கபூர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், பிரபல பாலிவுட் நடிகை ப்ரணிதா சோப்ராவை இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், பிரபல டென்னிஸ் வீராங்கனை சாய்னாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் நடித்துவருவதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.