மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
90ஸ் இளம் ரசிகைகளின் கனவுகண்ணனாக வலம் வந்த நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா? அடேங்கப்பா.. இந்த பிஸினஸும் செய்யுறாரா!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டங்களில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து நடிகர் பிரசாந்த் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பின்னர் புது நடிகர்களின் வருகை, அடுத்தடுத்த படங்களில் தோல்வி, சொந்த வாழ்க்கையில் பிரச்சினை ஆகியவற்றால் இவரது சினிமா வாழ்க்கையில் பின்னடைவு ஏற்பட்டது. மேலும் இவரது உடல் எடையும் பெருமளவில் கூடியது. அதனை தொடர்ந்து சில காலங்கள் நடிக்காமல் இருந்த நடிகர் பிரசாந்த் தற்போது மீண்டும் சினிமாவில் களமிறங்கி அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஒருகாலக்கட்டத்தில் சினிமாவில் பெருமளவில் சாதித்த நடிகர் பிரசாந்த் சொந்தமாக நகைக்கடை ஒன்றையும் வைத்துள்ளாராம். இவ்வாறு தொழில், சினிமா என பிசியாக இருக்கும் நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளது..