மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அசுர வளற்சி அடையும் ப்ரியா பவானி சங்கர்! யாருடன் ஜோடி சேர்கிறார் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.
ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.
அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்கள் வெளிவர உள்ளன.
இந்நிலையில் மலையாளத்தின் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் பிரியா பவானி சங்கர். ரா.கார்த்திக் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு வான் என்று பெயர் வைத்துள்ளனர்.