மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜய் டிவி ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்ட வீடியோ! வைரலாக்கும் ரசிகர்கள்! இதான் காரணமா?
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல்வரை தொடர்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ப்ரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மாபெரும் வெற்றிபெற ப்ரியாவும் ஒரு காரணம். இவரது அழகில் மயக்கிய ரசிகர்கள் இவருக்காகவே இந்த தொடரை பார்த்து ரசித்தனர்.
இந்நிலையில் தொலைக்காட்சியை விட்டு வெள்ளித்திரை செல்லும் முயற்சியில் இறங்கிய ப்ரியா நடிகர் வைபவின் நடிப்பில் வெளியான மேயாத மான் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு அக்கா பெண்ணாக நடித்திருந்தார் ப்ரியா பவானி சங்கர்.
தற்போது SJ சூர்யா நடிக்கும் மான்ஸ்டர் படம் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் ப்ரியா தற்போது துப்பாக்கி சுடும் காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் தல அஜித் இதேபோன்று துப்பாக்கி சுடும் காட்சி ஓன்று வெளியாகி வைரலானது. தற்போது பிரியா பவானி சங்கரின் வீடியோவும் வைரலாகிவருகிறது.