மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதை உன் அம்மாகிட்ட கேளு! ரசிகரின் மோசமான கேள்விக்கு நெத்தியடி பதிலளித்த நடிகை ப்ரியாமணி!!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனை தொடர்ந்து அவர் அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து பல ஹிட்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ப்ரியாமணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக உள்ளார். இந்த நிலையில் அவர்
கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அண்மையில் பிளாக் உடையில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு கமெண்ட் செய்து வந்துள்ளனர். அப்பொழுது ரசிகர் ஒருவர் பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அவர் அதை முதலில் உன் அம்மா மற்றும் சகோதரியிடம் கேள். அவர்கள் அதை வெளியிட்டால் நானும் பதிவிடுகிறேன் என பதிலடி கொடுத்துள்ளார். உடனே அந்த நபர் அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். அது பதிவு தற்போது தீயாய் பரவி வருகிறது.