மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"பெண்களை அந்த வார்த்தை சொல்லி கூப்பிடாதீங்க" ப்ரியாமணி காட்டம்.!
2003ம் ஆண்டு "எவரே அடகாடு" என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவர் ப்ரியாமணி. அதன் பின்னர் 2004ம் ஆண்டு தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் "கண்களால் கைது செய்" என்ற ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு அமீர் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக "பருத்தி வீரன்" என்ற படத்தில் கிராமத்து நாயகியாக நடித்து அசத்தினார். மேலும் பருத்தி வீரன் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினையும் வென்றார். சமீபத்தில் வெளியான "ஜவான்" படத்திலும் ப்ரியாமணி நடித்துள்ளார்.
இந்நிலையில், அவர் அளித்த ஒரு பேட்டியில், "பெண்கள் முப்பது வயதைத் தாண்டினாலே "ஆன்ட்டி" என்று அழைக்கின்றனர். ஆனால் ஆண்களை நாற்பது, ஐம்பது வயதானாலும் அவர்களை யாரும் "அங்கிள்" என்று அழைப்பதில்லை. அப்படி அழைப்பவர்களுக்கும் நாளை வயாதாகும் என்று அவர்கள் அறியவில்லை.
எனக்கு 39 வயதாகிறது. ஆனால் உடலளவில் நான் மிகவும் பிட்டாக இருக்கிறேன். ஆரம்பத்தில் இதுபோல கருத்துக்கள் எனக்கு வருத்தமாக இருந்தாலும், நாளடைவில் கண்டுகொள்ளாமல் இருக்க கற்றுக்கொண்டேன். கருத்து சொல்பவர்களுக்கு பதில் சொல்லி முக்கியத்துவம் தரத் தேவையில்லை" என்று ப்ரியாமணி கூறியுள்ளார்.