மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரண்டு குழந்தைகள் இருக்காங்க.. அவரோட திருமணம் செல்லாது! நடிகை பிரியாமணியின் வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய சிக்கல்!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரியாமணி கார்த்தியுடன் நடித்த பருத்திவீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவரது திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
பிரியாமணி கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது ஆயிஷா என்பவர் தான்தான் முஸ்தபாவின் முதல் மனைவி எனவும், முஸ்தபா தன்னை விவாகரத்து செய்யாமல், பேச்சிலர் என நீதிமன்றத்தில் கூறி பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் செல்லாது எனவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆனால் இதுகுறித்து முஸ்தபா கூறுகையில், ஆயிஷா என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். குழந்தைகளின் செலவுக்காக நான் தவறாமல் அவருக்கு பணம் அனுப்பி வருகிறேன். நாங்கள் இருவரும் 2010ஆம் ஆண்டு பிரிந்துவிட்டோம். 2013ல் விவாகரத்தும் பெற்றுவிட்டோம். தற்போது பிரியாமணிக்கும், எனக்கும் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆனபிறகு என்னிடமிருந்து பணம் பறிப்பதற்காக அவர் இப்படியொரு குற்றத்தை சாட்டுகிறார் என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ஆயிஷா, இரண்டு குழந்தைகள் இருப்பதால் இந்த பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்க்க நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதனாலேயே சட்டப்படி சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கிறது என கூறியுள்ளார்.