மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மாதிரி பேசுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு! அப்படி செய்யாதீங்க.. மனம் வருந்திய நடிகை பிரியாமணி!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத் தொடர்ந்து அவர் அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.
பருத்திவீரன் திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டை வாங்கி தந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் சில திரைப்படங்களில் பிஸியாக இருந்த நடிகை பிரியாமணி 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் தான் பட்ட கஷ்டங்களை குறித்து நடிகை பிரியாமணி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்பொழுது அவர், சினிமா துறை மிகுந்த போட்டி நிறைந்தது. நான் மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேறினேன். திருமணம் நான் நடிப்பதற்கு தடையாக இல்லை. என் கணவர் மிகவும் உதவியாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது.
சினிமாவில் திருமணமானவராக வயது என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது. திறமை இருந்தால் முன்னேறலாம். எனக்கு வயதாகிவிட்டது. கறுப்பாக இருக்கிறேன். குண்டாகி விட்டேன் என விமர்சனம் செய்கின்றனர். அப்படி பேசுவது தான் மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக உள்ளது. தயவுசெய்து யாரையும் இப்படி தரக்குறைவாக பேசாதீர்கள். கருப்பாக இருப்பதும் அழகு தான் என கூறியுள்ளார்.