மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பருத்திவீரன் பிரியாமணியா இது! உடல் இளைச்சு இப்படி மாறிட்டாரே!! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு வசீகரன் ஹீரோவாக நடித்து வெளிவந்த கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இப்படத்தை பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கி இருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து பிரியாமணி அது ஒரு கனாகாலம், பருத்திவீரன், மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து பிஸியாக இருந்த பிரியாமணி திருமணத்திற்கு பிறகு சற்று உடல் எடை அதிகரித்து இருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் நன்கு இளைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.