மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. நடிகை பிரியாமணிதானா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு ஆகிட்டாரே! செம ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் கண்களால் கைது செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த பிரியாமணி கார்த்தியுடன் இணைந்து பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிரபலமானார். மேலும் அந்த படம் அவரது திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
நடிகை ப்ரியாமணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுள்ள இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இடையில் உடல் எடை அதிகரித்திருந்த பிரியாமணி படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.
மேலும் நடிகை ப்ரியாமணி தற்போது நன்கு உடல் எடை குறைந்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது ஒல்லியாக, மாடர்னாக இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.