மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாவ்.. செம கலர்ஃபுல்லாக பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் பருத்திவீரன் நாயகி! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த பருத்திவீரன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரியாமணி. அந்த படத்தில் அவர் நடித்த முத்தழகு கதாபாத்திரம் அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. படத்தின் வெற்றிக்கு அவரது கதாபாத்திரம் முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.
அதனைத் தொடர்ந்து பிரியாமணி மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா என தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு சற்று எடை அதிகரித்து இருந்த பிரியாமணி தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். இந்நிலையில் ப்ரியாமணி அவ்வப்போது சமூக வலைதளங்களில் வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது கலர்ஃபுல்லான உடையில் பட்டாம்பூச்சி போல இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.